Monday, December 2, 2019

மரபணு மாற்றம்

அதென்ன ?

மரபணு மாற்றம்...!


எளிதாக புரிந்து கொள்வோம்.


"உங்களுக்குச் சொந்த ஊர் மதுரை' என வைத்துக்கொள்வோம். "நீங்கள் வேலை நிமித்தமாகவோ வாழ்க்கையை ஓட்டுவோ சென்னை வந்து தங்கி உள்ளீர்கள்' என நினைத்துக் கொள்வோம்.

சிறிய அளவு அட்சரேகை வித்தியாசத்திலும் சமூகமாற்றத்திலும் உங்களது உண்மையான இயல்பு சென்னையில் வெளிப்படாமல் போகும். காரணம் ஊர் பற்று இனப்பற்று அல்ல..உங்களது மரபணு கூறுகள் மதுரையின் காற்றில் இணைந்திருப்பதால்.

நம்நாட்டை பூர்வீகமாக கொண்ட காய்கறிகள் பழங்கள் மரங்கள் தானியங்கள் பயிறு வகைகள் என உணவு பொருள் மட்டுமல்லாமல் மற்ற விலங்குகளும் ஏனைய உயிர்களும் எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் செயற்கை மாற்றத்தையும் தாங்கி சிறிதேனும் காற்றில் பிழைத்திருக்கும்.

நமது தட்பவெப்ப சூழ்நிலைக்கும் நாம் உண்ணும் உணவுக்கும் இருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைப் பொருத்து பொறுத்தே நமது ஆரோக்கியம் அமைந்துள்ளது.

நீங்கள் நன்றாக படிக்கவில்லை என உங்களது மரபணுவில் ஏதோ ஒரு அறிவாளியின் மரபணுவை செலுத்தினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?

அப்படி இருக்க ஒரு நுண்ணுயிரியின் மரபணுவை எடுத்து உயிர் முழுக்க பரவ விட்டால் அந்த உயிரின் தவிப்பு அதன் அணுக்களிலும் கலந்து அதை உண்பவரின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்பதை ஏன் மறந்தோம் ?

"மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இல்லை என்றால் பசி பஞ்சம் பட்டினி ஏற்பட்டிருக்கும் "என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டாலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் தான் பசை பசி பஞ்சம் பட்டினி ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.

நமக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பயிர்களை உணவாகக் கொண்டு அதையே ருசி எனவும் கண்டு மெய்மறந்து நாக்கில் உள்ள சுவைகளை துறந்து பிறவி பைத்தியங்களாய்த் திரிகின்றோம்.


அடைக்கப்பட்ட கூண்டில் வளரும் கோழிகள் நாட்டிற்கானவை என மூடத்தனமாக நம்புகின்றோம்.

ஸ்வீட் கார்ன்.. பாப்கார்ன்.. கேரட்.. பீட்ரூட்..ஆப்பிள்.. பீன்ஸ்..கேப்ஸிகம்.. பிரக்கோலி.. காலிபிளவர்.. கேப்பேஜ்.. நூடுல்ஸ்... டேட்ஸ்.. பாதாம்... பிஸ்கட்.. கேக் என வரிசை படுத்த நினைத்தால் பக்கங்கள் போதாது..

தெரிந்தே அந்நிய உணவிற்கு அடிமை ஆகி விட்டோம். அந்தந்த பயிர்கள் நமது தட்ப வெப்பத்தைத் தாங்காமல் திணறுகிறது என்று... விளைச்சல் வயிற்றுக்குப் போதவில்லை என்று.. நினைத்த நிறத்தில் இல்லையென்று.. இன்னும் ஏதேதோ காரணங்களைக் கொண்டு...

தக்காளியையும் உருளை கிழங்கையும் கலந்து பொமேடோ..
கோவேறு கழுதை..
ட்ரிட்டிக்கேல்... காங்கேய பசுவிற்கு HF ன் சினையூசி...
மனிதனையும் மலை குரங்கையும் கலந்து விரைவில் ஒன்று..!

( முக்கிய குறிப்பு: வேற்று கிரகவாசியின் மரபணு இன்னும் கிடைத்தபாடில்லை )

இயற்கையை முட்டாளாக்குகிறோம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


எட்டு வயதில் பூப்படையும் சிறுமி... மூன்று வயதில் கண்களில் கண்ணாடியுடன் திரியும் குழந்தைகள்... 30 வயதில் ரத்த அழுத்தம்... நீரழிவு நோய்... புற்றுநோய்... இன்னும் பெயரிடப்படாத பல நோய்கள்... என இவை அனைத்திற்கும் இயற்கைக்குப் புறம்பான நம் செயல்களே காரணம்.

உணவு மருந்தாகும்.. அதே உணவு விஷமாகவும் ஆகும்..!


நம்மை மலடாக்கி நம் மண்ணையும் மலடாக்கி நாம் செய்யும் பாவங்களுக்கு முடிவுரை கட்டுவோம்.

தானியங்கள்,குறு தானியங்கள், பயறு வகைகள்,கொடியாய் படரும் காய்கறி கொடிகள், கொய்யா, வாழை, பலா, மா, நாவல், நெல்லி, அத்தி, இலந்தை கோவை, அதலக்காய், நீர் காய்கள், வரப்போரம் விளையும் கீரைகள், மிளகு என இயற்கையன்னை வஞ்சனை இல்லாமல் நமக்களித்த கொடைகளை சோம்பேறித்தனம் பார்க்காமல் விவசாயிகளிடம் சென்று வாங்கி உண்டு வந்தால் எஞ்சியவற்றைக் காப்பாற்றலாம்.

1 comment: